தினக்கூலி வழங்க கோரி சிஐடியு மறியல் போராட்டம்
திருச்சி, செப்.24: மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு. நிர்வாகமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும் எனக்கூறி சிஐடியு சார்பில் மின் அலுவலக வாசலில் மறியல் போராட்டம் ேநற்று நடந்தது.திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் சிஐடியூ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, திருச்சி பெருநகர் வட்டம் சார்பில் மறியல் போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு சங்க வட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாநில துணை த்தலைவர் ரெங்கராஜன் முன்னிலை வகித்தார்.மறியலின்போது, அரசாணை 950ன் படி தடை செய்யப்பட்ட 19 இடங்களில் பணி செய்திடும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மறியல் போராட்டத்தில் நிர்வாகிகள் பழனியாண்டி, இருதயராஜ், செல்வராஜ், கண்ணன், கோட்ட செயலாளர்கள் ராதா, நாகராஜன், ரியாஜூதீன், ஜெசிந்தா ரோஸ்லின்மேரி உட்பட சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.