திருச்சி, தஞ்சை, மண்டலங்களுக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே கிராஸ் கண்ட்ரி போட்டி
திருச்சி, ஆக.19: திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இனைவு பெற்ற திருச்சி, தஞ்சை, மண்டலங்களுக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவ, மாணவியர்களுக்கான கிராஸ் கண்ட்ரி போட்டி தத்னூர், மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நடத்தப்பட்டது. 15 கல்லூரிகளிலிருந்து 70 மாணவிகள் மற்றும் 17 கல்லூரிகளிலிருந்து 85 மாணவர்களும் பங்கேற்ற இப்போட்டியில் மாணவர்கள் பிரிவில் திருச்சி, ஜோசப் கல்லூரி 25 புள்ளிகள் எடுத்து முதலிடமும், மாணவிகள் பிரிவில் புதுகை மாமன்னர் கல்லூரி 23 புள்ளிகள் எடுத்து முதலிடமும் பிடித்து பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மாணவ, மாணவியர்களுக்கான கிராஸ் கண்ட்ரி போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்றது.
மாணவர்கள் பிரிவில் 36 புள்ளிகளும், மாணவியர்கள் பிரிவில் 65 புள்ளிகளும் எடுத்து திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி இரண்டாவது இடம் பிடித்தது. மாணவர்கள் பிரிவில் புதுகை, மாமன்னர் கல்லூரி, 37 புள்ளிகள் எடுத்தும், மாணவியர்கள் பிரிவில் ஹோலி கிராஸ் கல்லூரி 65 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடம் பிடித்தன. மாணவர்கள் பிரிவில் 92 புள்ளிகள் எடுத்தும், மாணவியர்கள் பிரிவில் 62 புள்ளிகள் எடுத்து பாரதிதாசன் பல்கலைக்கழக துறைகள் அணி நான்காவது இடம் பிடித்தது.