பெண்ணிடம் நகை பறிப்பு
Advertisement
திருச்சி, ஆக.19: திருச்சியில் பெண்ணிடம் நகை பறித்த நபர்களை போலீசார் தேடுகின்றனர்.
திருச்சி எ.புதூரை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவரது மனைவி ஜனனி (27). இவர் கடந்த 16ம்தேதி கணவருடன் மன்னார்புரம் பகுதியில் பைக்கில் சென்றார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், ஜனனி அணிந்திருந்த இரண்டே முக்கால் பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடுகின்றனர்.
Advertisement