தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி மாவட்டத்தில் 11 இடங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

திருச்சி, டிச. 12: திருச்சி மாவட்டத்தில் நியாய விலை அங்காடிகளில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (13ம்தேதி) தனி வட்டாட்சியா்கள் வட்ட வழங்கல் அலுவலா்களால் நடத்தப்பட உள்ளது.

Advertisement

ரேசன் கார்டு குறித்த குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவா்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கல் தொடா்பான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாதந்தோறும் நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. திருச்சி மாவட்டத்தில் நாளை(13ம்தேதி) சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நியாய விலை அங்காடிகளில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம், தனி வட்டாட்சியா்கள் வட்ட வழங்கல் அலுவலா்களால் நடத்தப்பட உள்ளது.

இதற்கு ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பு அலுவலா் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி கிழக்கு- மலைக்கோட்டை 2. திருச்சி மேற்கு - தில்லைநகா் 2, திருவெறும்பூர் - ஆர்இசி, ரங்கம் - அல்லூர், மணப்பாறை - பன்னாங்கொம்பு, மருங்காபுரி - பிராம்பட்டி, லால்குடி - பச்சாம்பேட்டை, மண்ணச்சநல்லூர் - ராசம்பாளையம், முசிறி - செவந்திலிங்கபுரம், துறையூர் - கண்ணணூர் 1, தொட்டியம் - தொட்டியம் 1. எனவே, பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடா்பான கோரிக்கைகளான குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், முகவாி மாற்றம் மற்றும் இதர கோரிக்கைகளை கூட்டங்களில் கலந்து கொண்டு தொிவித்து பயனடையலாம் என்ற தகவலை மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News