திருச்சி மாவட்டத்தில் 11 இடங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்
திருச்சி, டிச. 12: திருச்சி மாவட்டத்தில் நியாய விலை அங்காடிகளில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (13ம்தேதி) தனி வட்டாட்சியா்கள் வட்ட வழங்கல் அலுவலா்களால் நடத்தப்பட உள்ளது.
ரேசன் கார்டு குறித்த குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவா்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கல் தொடா்பான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாதந்தோறும் நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. திருச்சி மாவட்டத்தில் நாளை(13ம்தேதி) சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நியாய விலை அங்காடிகளில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம், தனி வட்டாட்சியா்கள் வட்ட வழங்கல் அலுவலா்களால் நடத்தப்பட உள்ளது.
இதற்கு ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பு அலுவலா் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி கிழக்கு- மலைக்கோட்டை 2. திருச்சி மேற்கு - தில்லைநகா் 2, திருவெறும்பூர் - ஆர்இசி, ரங்கம் - அல்லூர், மணப்பாறை - பன்னாங்கொம்பு, மருங்காபுரி - பிராம்பட்டி, லால்குடி - பச்சாம்பேட்டை, மண்ணச்சநல்லூர் - ராசம்பாளையம், முசிறி - செவந்திலிங்கபுரம், துறையூர் - கண்ணணூர் 1, தொட்டியம் - தொட்டியம் 1. எனவே, பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடா்பான கோரிக்கைகளான குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், முகவாி மாற்றம் மற்றும் இதர கோரிக்கைகளை கூட்டங்களில் கலந்து கொண்டு தொிவித்து பயனடையலாம் என்ற தகவலை மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.