பராமரிப்பு பணி காரணமாக லால்குடி பகுதியில் 14ம் தேதி மின் நிறுத்தம்
திருச்சி, ஆக.12: திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 14ம்தேதி லால்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மின் நிறுத்தப்படும் பகுதிகள் விவரம் வருமாறு; நகர், கழிப்பெருங்காவூர், முளப்பதுகுடி, வேலாயுதபுரம், பச்சாம்பேட்டை வளைவு, டி,. வளவனூர், மாந்துறை, பிரியா கார்டன், வாளாடி, தண்டாங்கோரை, எசனைக்கோரை, அப்பாதுறை, தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், செம்பழனி, மேலவாளாடி, புதுக்குடி, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், நெருஞ்சலக்குடி, ஆங்கரை (சரவணாநகர், தேவிநகர், கைலாஸ்நகர்), நெய்குப்பை, ஆர்.வளவனூர், புதூர் உத்தமனூர், பல்லபுரம் வேளாண் கல்லூரி ஆகிய பகுதிகளில் வரும் 14ம்தேதி காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என லால்குடி கோட்ட செயற்பொறியாளர் மணிராஜன் தெரிவித்துள்ளார்.