துவாக்குடி பஸ்டாண்டில் மயங்கி இடந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு
திருவெறும்பூர், ஆக.12: திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பஸ்டாண்டில் மயங்கி கடந்த முதியவர் சிகிச்சைக்கு பலனின்றி பரிதாபமாக இறந்தார்.துவாக்குடி பஸ் ஸ்டாப் அருகே கடந்த 29ம் தேதி 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக எஸ்ஐ நாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து எஸ்ஐ தலைமையிலான போலீசார் முதியவரை மீட்டு திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசாரின் விசாரணையில், முதியவர் பெயர் ரவி (70) என்பது மட்டும் முதலில் தெரிந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.