காவலன் செயலி குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு
சமயபுரம், டிச.7: மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு காவலன் `எஸ்.ஓ.எஸ்’ செயலி செயல்பாடுகள், பதிவிறக்கம் முறைகள் குறித்து பெண் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காவல்துறை சார்பில், `காவலன் எஸ்.ஓ.எஸ்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதில், பொது மக்களுக்கு எதிராகவும் குறிப்பாக பெண்கள், முதியோருக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களை தடுத்து, பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் செயலியை பெண்கள் முதியோர் செல்போனில் பதிவிறக்கம் செய்து செயல்படுத்தும் முறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் உத்தரவிட்டார். அதன்படி மண்ணச்சநல்லூர் பகுதியில் பெண் காவலர்கள் எஸ்ஓஎஸ் செயலியை பொதுமக்கள் செல்போன் பதிவிறக்கம் செய்து, அதனை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.