தமிழக அரசுக்கு பெற்றோர்கள் நன்றி: செப்.5ம்தேதி மதுக்கடைக்கு விடுமுறை
திருச்சி, செப்.3: மிலாது நபியை முன்னிட்டு திருச்சியில் டாஸ்மாக், பார்கள் இயங்காது என திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிலாது நபி தினத்தை முன்னிட்டு வரும் செப்.5ம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் (எப்எல்1) மூடப்பட்டிருக்கும். அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்எல்2/ எப்எல்3ஏ/ எப்எல்3ஏஏ/ எப்எல்11 வரையிலான ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement