திருச்சியில் 3 நாட்கள் நடக்கிறது வட்டார அரசு பள்ளிகளில் மன்ற போட்டிகள்
திருச்சி, செப்.3: திருச்சி மாவட்ட வட்டார அரசு பள்ளிகளில், மன்றங்களில் செப்.2ம் தேதி முதல் 4ம் தேதி வரை மன்றம் சார்ந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை தற்போது பல்வேறு வளர்ச்சிகள் அடைந்து வருகிறது. மாணவர்கள் தற்போது படிப்பு பள்ளிகள் சார்பில் மட்டுமே சார்ந்து இல்லாமல் திறன் மேம்பாட்டு செயல்பாட்டு செயல்பாடுகளிலும் அரசு ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அனைத்து பள்ளிகளிலும் மன்றங்கள் அமைக்கப்பட்டு அதில் மாணவர்கள் பல்வேறு திறன் சார்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்த மன்றங்களை பள்ளி ஆசிரியர்கள் தலைமை வகித்து மாணவர்களின் திறனை கண்டறிந்து அவர்களுக்கு உண்டான திறன்களில் கவனம் செலுத்தி மாணவர்களை தயார்படுத்தி வருகின்றனர்.
இந்த மன்றங்கள் சார்பில் பல்வேறு திறன் மேம்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மன்றங்களில் 6,7,8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். இலக்கிய மன்றத்தில் கதைகூறல் போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, போன்றவை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் நடைபெறும், வினாடிவினா மன்றம் சார்பில் பல்வேறு தலைப்புகளில் வினாடி வினா போட்டிகள் நடைபெறும். வானவில் மன்றம் சார்பில் கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த போட்டிகள் நடைபெறும், சிறார் திரைப்பட மன்றம் சார்பில் ஒலிப்பதிவு, வசனம் எழுதுதல், நடிப்பு திறன் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். சுற்றுச்சூலல் மன்றம் சார்பில் சுற்றுச்சூழலை காக்க தேவையான நடவடிக்கைகள் மாணவர்களால் மேற்கொள்ளப்படும். திருச்சி மாவட்டத்தில் இந்த பள்ளி மன்ற நிகழ்ச்சிகள் செப்.2ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் மேற்கண்ட 5 மன்றகளை சார்ந்த போட்டிகள் 14 வட்டாரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 11 அயிரத்து 600 மாணவர்கள் வரை சேர்ந்துள்ளனர். இந்த போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவர். அதில் வெற்றிபெறும் மாணவர்கள் அடுத்தக்கட்ட போட்டிகளுக்கு தகுதி பெறுவர். தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர்.இந்தாண்டு இந்த மன்ற போட்டிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகளவிலான மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.