மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கோரிக்கை மனுக்களை மேயர் பெற்றார்
திருச்சி, டிச.2: திருச்சி மாநகராட்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மேயர் அன்பழகன் பெற்றார். திருச்சி மாநகராட்சியில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநகர கமிஷனர் மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் அன்பழகன் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் துர்கா தேவி, ஜெயநிர்மலா, நகரப் பொறியாளர், சிவபாதம், நகர்நல அலுவலர், செயற்பொறியார்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.