கிளியூர் கிராமத்தில் ரூ.5.68 லட்சத்தில் குடிநீர் சேவை
திருவெறும்பூர், டிச.2: திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.5.68 லட்சம் மதிப்பிலான நிறைவடைந்த குடிநீர் திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட கிளியூர் கிராமத்தில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட போர்வெல் சின்டெக்ஸ் டேங் மற்றும் மோட்டார் பம்பு, வேங்கூர் அசோக் நகரில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.68 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் ஆகியவைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்.நிகழ்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை அலுவலர் கங்காதாரணி, ஒன்றிய செயலாளர் கருணாநிதி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.