சம்பா ஒருபோக சாகுபடிக்கு மானியத்தில் விதைபொருள்
திருவெறும்பூர், செப்.2: திருவெறும்பூர் வட்டார வேளாண் விரிவாக்கம் மையத்தில் சம்பா ஒருபோகத்திற்கு முன்பு மண்வளத்தை பாதுகாக்க தேவையான தக்க பூண்டு விதை மற்றும் சம்பா நெற்பயிர் சாகுப் படிக்கு தேவையான நெல் விதைகள் மானிய விலையில் விற்பனை செய்யப்படுவதாக திருவெறும்பூர் வட்டார வேளாண் விரிவாக்கம் மைய அலுவலர் தெரிவித்துள்ளார். திருவெறும்பூர் பகுதி விவசாயிகள் சம்பா ஒரு போக நெற்பயிர் சாகுபடி பணியை தொடங்குவதற்கு முன்பு திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டையில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் வயலில் மண்வளத்தை பெருக்குவதற்கு தேவையான தக்கை பூண்டு விதை மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சம்பா நெற் பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் விதை ரகங்களான ஆந்திரா பொன்னி, கோ 52 , ஆடுதுறை 54, வெள்ளை பொன்னி மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களான ஆத்தூர் கிச்சடி சம்பா, தூய மல்லி, சிவன் சம்பா ஆகிய விதை நெல்கள் விற்பனைக்கு தேவையான அளவு இருப்பு உள்ளது. இது மட்டுமல்லாமல் நெல் நுண்ணூட்டம். ஜிங்க் சல்பேட், சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் உயிர் உரங்கள் என அனைக்கு இடுபொருட்களையும் திருவெறும்பூர் பகுதி விவசாயிகள், மானிய விலையில் பெற்று பயன் பெறுமாறு திருவெறும்பூர் வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலர் சுகன்யா தேவி திருவெறும்பூர் பகுதி விவசாயிகளுக்கு அறிவுறுத்தி
உள்ளார்.