தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேசிய விளையாட்டு தினவிழா மனித சங்கிலி

திருச்சி, செப்.2: திருச்சியில் நடந்த தேசிய விளையாட்டு தினவிழா மனித சங்கிலியை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று தொடங்கி வைத்தார். இந்திய ஹாக்கியின் ஜாம்பவான் என்று போற்றப்பட்ட மேஜர் தயான் சந்த் பிறந்தநாளையொட்டி கடந்த 29ம் தேதி தேசிய விளையாட்டு நாள் விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி தேசியக் கல்லூரி, இந்திய தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு (பிஇஎப்ஐ), ரோட்டரி அமைப்புகளான திருச்சி பட்டர்பிளை, திருச்சி டிசி பிரைடு ஆகியவை இணைந்து மாபெரும் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்வினை திருச்சி காவிரி மேம்பாலத்தில் நடைபெற்றது.

Advertisement

தேசியக் கல்லூரியைச் சார்ந்த ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்ற இந்த மனித சங்கிலியை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்த மனித சங்கிலியில் பதாகைகளை ஏந்தி தேசியக் கல்லூரி மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சிறந்த பதாகைகளுக்கு அமைச்சர் முன்னிலையில் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.இம்மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேசியக் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் முத்துராமகிருஷ்ணன், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்ற இம்மாபெரும் விளையாட்டு நாள் விழா விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நிகழ்வினை தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பிரசன்ன பாலாஜி சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

Advertisement