சீரான குடிநீர் கேட்டு திருநங்கைகள் மனு
நாமக்கல், ஜன.7: குமாரபாளையம் தாலுகா, தட்டாங்குட்டை ஊராட்சி வீ.மேட்டூர் பகுதியில், திருநங்கைகளுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் 12 குடிசைகள் அமைத்து, திருநங்கைகள் வசித்து வருகிறார்கள். ஆனால், அங்கு குடிநீர் வசதி இல்லை. இதையடுத்து, நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு, திருநங்கைகள் வந்து கலெக்டர் உமாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், தங்கள் பகுதிக்கு போதுமான குடிநீர் வசதி செய்து கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement