வாசுதேவநல்லூரில் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்
Advertisement
சிவகிரி, ஜூலை 31: வாசுதேவநல்லூர்ஊராட்சிஒன்றிய கூட்ட அரங்கில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து வெளிவளாக பயிற்சி முகாம் நடந்தது. வாசுதேவநல்லூர் ஒன்றிய குழுத்தலைவர் பொன்.முத்தையா பாண்டியன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துபாண்டியன், அருள் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிர்வாக அலுவலர் முனியப்பா வரவேற்றார். ஒன்றிய பொறியாளர்கள் ஹவ்வா ஷகிரா, அருள் நாராயணன், வட்டார வளர்ச்சி மண்டல துணை அலுவலர் உஷா ராணி, யூனியன் துணை தலைவர் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் வார்டு உறுப்பினர்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டதுதனர்.
Advertisement