சீர்காழியில் 5 மணி நேரம் நின்ற ரயில்
சீர்காழி, ஜூலை 9: காரைக்காலிலிருந்து காலை 4. 50 மணிக்கு புறப்பட்டு பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சீர்காழி ரயில் நிலையத்திற்கு சுமார் 7.45 மணிக்கு வந்தடைந்தது. அப்போது கடலூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 3 சிறுவர்கள் உயிரிழந்ததால் ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சீர்காழி ரயில் நிலையத்தில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் நின்றதால் பயணிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளானார்கள். சில பயணிகள் பேருந்து மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்றனர். தொடர்ந்து மதியம் 1.45 மணிக்கு ரயில் பாதைகள் சரி செய்யப்பட்டதால் பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.