தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவெண்ணெய்நல்லூர் அருகே சோகம்; கிணறு வெட்டும்போது ரோப் அறுந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி

திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 31: திருவெண்ணெய்நல்லூர் அருகே கிணறு வெட்டும்போது இரும்பு ரோப் அறுந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அருங்குருக்கை கிராமத்தில் உள்ள கண்ணன் (62) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணி கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது. இந்த பணியை திருக்கோவிலூர் அருகே உள்ள பெருங்குருக்கையை சேர்ந்த தணிகாசலம் (48), நரிப்பாளையத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (40), நெய்வணையை சேர்ந்த முருகன் (38) ஆகியோர் மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சுமார் 8 மணியளவில் மீண்டும் கிணறு ஆழப்படுத்தும் பணி நடந்தது.

Advertisement

பின்னர், கிரேனில் இணைக்கப்பட்டிருந்த மண் அள்ளும் பக்கெட் மீது உட்கார்ந்து கொண்டு கிணற்றுக்கு மேலே வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இயந்திரத்தின் இரும்பு ரோப்பானது அறுந்து 100 அடி ஆழ கிணற்றில் மூவரும் விழுந்துள்ளனர். இதில் 3 பேரும் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள் மூவரது உடலையும் கிணற்றிலிருந்து மேலே கொண்டு வந்தனர். உயிரிழப்புக்கு காரணமான பொக்லைன் இயந்திரத்தின் ஓட்டுனர், நிலத்தின் உரிமையாளர் மற்றும் இவர்களை இந்த பணிக்கு அழைத்து வந்த நபர் என 3 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த தணிகாசலம், ஹரிகிருஷ்ணன், முருகன் ஆகிய 3 பேரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இறந்த 3 பேரின் உறவினர்களும் ரோப் அறுந்து விழுந்ததில் இவர்கள் இறக்கவில்லை, கிணற்றை ஆழப்படுத்த சட்டத்திற்கு புறம்பாக ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி உள்ளனர். அதில் வெடிப்பு ஏற்பட்டு அதன் மூலமாக இவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் நேரில் வந்து இறந்தவர்களின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட 3 நபர்களையும் பிடித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து 3 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப அவர்களது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கிணறு தூர்வாரும் பணியில் ஈடுபட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement