கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சேந்தமங்கலம், பிப்.17: கோடை வெயில் தொடக்கத்தால் கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லிமலையில் பகலில் மிதமான வெயிலும், இரவில் குளிர் நிலவி வருகிறது. காலையில் சில்லென்று குளிர் காற்று வீசுகிறது. கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விடுமுறை தினமான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். கர்நாடகா, பாண்டிச்சேரி மாநிலங்களிலிருந்து டூவீலரில் ஐடி, நிதி நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.