ஆண்டாங்காரை கிராமத்தில் சேதமடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி
திருத்துறைப்பூண்டி, நவ. 11: திருத்துறைப்பூண்டி அருகே ஆண்டாங்காரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி இப்பகுதி குடியிருப்புகளின் குடிநீர் தேவைக்காக கட்டப்பட்டது. தற்போது மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் நான்கு தூண்களும் சேதம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக எந்த நேரத்திலும் நீர் தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மேலும் குழந்தைகள் பயிலும் பள்ளி வளாகத்தில் இந்த நீர் தேக்க தொட்டி அமைந்துள்ளதால், பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுமோ? என்ற அச்சம் இப்பகுதி பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக ேசதம் அடைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து அகற்றிட வேண்டும். மேலும் அதிக கொள்ளவு கொண்ட புதிய நீர் தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.