பெண் ஊழியரிடம் 2 சவரன் பறிப்பு 2 பைக் ஆசாமிகளுக்கு வலை செய்யாறு அருகே சமூக நலத்துறை
செய்யாறு, அக்.31: செய்யாறு தாலுகா கீழ்ப்படிப்பாக்கம் விரிவு பகுதி வேதபுரி தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சர்மிஸ்டா(54). இவர் சமூக நலத்துறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளராக உள்ளார். இவர் நேற்று காலை சுமார் 10 மணி அளவில் செய்யாறில் இருந்து மாங்கால் கூட்ரோடு அருகே மாத்தூர் கிராமத்தில் நடந்த முகாமிற்கு தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது மாங்கால் சாலையில், சோழவரம் அருகே ஐய்மன் நகர் எதிரில் அவரது செல்போனிற்கு அழைப்பு வந்தது. இதனால் சர்மிஸ்டா நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் செய்யாறுக்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டே சர்மிஸ்டா கழுத்தில் இருந்த டாலர் செயினை அறுக்க முயன்றனர். இதனை சுதாரித்துக்கொண்ட அவர் டாலரைப் பிடித்துக் கொண்டார். இதனால் இரண்டு சவரன் செயினை மட்டும் அறுத்துக் கொண்டு மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றனர். இதுகுறித்து சர்மிஸ்டா தூசி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
