தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் பூஜைப் பொருட்கள் விற்பனை அமோகம் கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியது திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று

திருவண்ணாமலை, ஆக. 27: திருவண்ணாமலை மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, மாவட்டம் முழுவதும் கூடுதல் ேபாலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

பிரசித்தி பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, பிரமாண்ட வடிவிலான விதவிதமான விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, போலீஸ், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம் போன்ற துறைகளிடம் அனுமதி பெற்று நிலைகள் நிறுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, விழாக்குழுவினர் மூலம் சிலை பாதுகாப்பு குழுவும் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு உகந்த நேரம் நேற்று பகல் 2.22 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 3.52 மணிக்கு நிறைவு பெறுகிறது. எனவே, திருவண்ணாமலையில் நேற்று மாலையில் இருந்தே ஒருசில இடங்களில் விநாயகர் வழிபாடுகள் உற்சாகமாக தொடங்கிவிட்டது. மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பூஜை பொருட்கள் வாங்க திருவண்ணாமலை கடைவீதியில் மக்கள் கூட்டம் நேற்றே அலைமோதியது. தேரடி வீதி, கடலைக்கடை சந்திப்பு, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் விநாயகர் சதுர்த்திக்கான பூஜைப் பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. மேலும், களிமண்ணால் வடிவமைக்கப்பட்ட, அழகிய வண்ணம் பூசப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் ஆயிரக்கணக்கில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செங்கம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

விநாயகர் வழிபாட்டுக்காக, பழங்கள், மலர்கள், கம்பு, மக்காசோளம், எருக்கம்பூ மாலை, அருகம்புல், வண்ணமயமான குடைகள் போன்றவற்றின் விற்பனை அமோகாக நடைபெறுகிறது. இந்நிலையில், களிமண்ணால் செய்யப்பட்ட, சுடப்படாத மற்றும் எவ்வித ரசாயனக் கலவையும் இல்லாத, கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாராகும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே விநாயகர் சிலைகள் வடிவமைக்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீரில் கரையும் தன்மையில்லாத, சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில், பிளாஸ்டர்பாரிஸ், சுட்ட களிமண், ரசாயன வண்ணம் பூசப்பட்ட சிலைகளை வடிவமைக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News