இருதரப்பு மோதலில் 4 பேர் மீது வழக்கு பெரணமல்லூர் அருகே
பெரணமல்லூர், ஆக. 27: பெரணமல்லூர் அடுத்த கொழப்பலூர் பகுதியைச் சேர்ந்த எல்லம்மாள். இவர் கடந்த 24ம் தேதி தனது வீட்டு அருகில் நின்று கொண்டிருந்தபோது அப்போது அதே பகுதி சேர்ந்த வாசுதேவன் மற்றும் அவரது நண்பர் செல்வம் ஆகியோர் பைக்கில் மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் எல்லம்மாள் அந்த நபர்களை ஏன் இப்படி வருகிறார் என கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் இருந்த அவரது கணவர் சங்கர் மற்றும் மகன் கவியரசு ஆகியோர் வெளிய வந்து தட்டி கேட்டுள்ளனர். இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில் அருகில் இருந்து கட்டையால் வாசுதேவனை தாக்கியுள்ளார். பதிலுக்கு இவர்களும் அவர்களை தாக்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட காயம் காரணமாக இரு தரப்பினரும் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதன் தொடர்ந்து நேற்று முன்தினம் பெரணமல்லூர் காவல் நிலையத்தில் எல்லம்மாள் மற்றும் வாசுதேவன் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் பெரணமல்லூர் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி இரு தரப்பிலும் கவியரசு, சங்கர், வாசுதேவன், செல்வம் என நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.