ஏர் ஹாரன்கள் பறிமுதல் உடனடி அபராதம் விதிப்பு செய்யாறில்
செய்யாறு, செப். 26: செய்யாறு பேருந்து நிலையம் மற்றும் காந்தி சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக ஊழியர்கள் பஸ் மற்றும் கனரக வாகனங்களில் ஏர் ஹாரன்கள் பயன்படுத்துவது, இதனால் ஒலி மாசுபாடு மற்றும் அதிகளவு சத்தம் மற்றும் எரிச்சல் ஏற்படுவதை தடுக்கும் விதமாக திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள், லாரிகளை தடுத்து நிறுத்தி ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்து உடனடியாக தலா ரூ.1000 அபராதம் விதித்தார்.
Advertisement
Advertisement