வீடுகளின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு பத்திரத்தை கிழித்து எறிந்த திருடர்கள் வந்தவாசி அருகே போலீஸ் விசாரணை
வந்தவாசி, ஆக. 20: வந்தவாசி அடுத்த கோயில் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகர்(53) மக்கள் நல பணியாளர். இவர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்தினருடன் சென்றார். அதேபோல் இவரது வீட்டின் அருகே வசிப்பவர் பிரகாஷ்(36) இவரும் வந்தவாசியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு சென்றுள்ள நிலையில் மர்ம ஆசாமிகள் வீட்டில் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்று திருட முயன்றுள்ளனர். இதில் பிரகாஷ் வீட்டில் எந்த விதமான பொருட்களும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய திருடர்கள் மனோகரன் வீட்டில் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடி சென்றனர். மேலும் பீரோவில் இருந்த வீட்டு மனை பத்திரத்தினை எடுத்து கோபத்தில் கிழித்து எரிந்து சென்றதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக மனோகர் வீட்டில் இருந்த நகைகள் தப்பியது. வந்தவர்கள் உண்மையிலேயே திருடர்களா அல்லது மனோகர் வீட்டு பத்திரத்தை சேதம் செய்ய வந்தவர்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.