மண்மலை குன்றை குடைந்து கோயில் புனரமைப்பு பணி நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை செங்கம் அருகே
செங்கம், ஆக. 20: செங்கம் அருகே மண்மலை கிராமத்தில் மண்மலை குன்று உள்ளது. இந்த குன்றின் மேல் மேட்டு பாலசுப்பிரமணியர் கோயில் பல ஆண்டு காலமாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கோயிலை புனரமைக்க நிதி ஒதுக்கி செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு தேவையான மண் மற்றும் மொரம்பு மண்ணை மண்மலையில் இருந்தே ஜேசிபி மூலம் குடைந்து எடுத்து பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. குன்றுமேட்டு முருகன் கோயில் அருகாமையிலேயே மண்மலையில் பல்வேறு இடங்களில் மண் எடுக்கபட்டுள்ளதாம்.
பள்ளம் ஏற்பட்ட பகுதியில் ஜேசிபி மூலம் மலையைத் தோண்டி சமன் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புனரமைப்பு பணிக்காக அரசு நிதி ஒதுக்கி உள்ள நிலையில் அதற்கு தேவையான மண் மொரம்பு மணல் சிமெண்ட் போன்ற தளவாடப் பொருட்கள் போன்றவை வெளியில் இருந்து கொண்டு வந்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் குன்று மேட்டை குடைந்து அதில் இருந்து மண் எடுக்கப்படுகிறது என பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மண்மலை முருகர் கோயில் பக்தர்களின் ஆன்மீக வழிபாட்டு தளம் குன்றிருக்கும் இடத்தில் தான் குமரன் இருப்பார் என்பது தெய்வீக பழமொழி, அந்த மொழிக்கேற்ப இருக்கும் இந்த கோயிலில் மரபு மீறி செயல்படுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.