அண்ணன் கட்டையால் சரமாரி தாக்கிய தம்பி போலீஸ் வலை மாட்ைட கட்டிய தகராறு
வந்தவாசி, ஆக 12: வீட்டிற்கு வெளியே இடையூறாக மாட்டை கட்டிய தகராறில் அண்ணனை உருட்டு கட்டையால் தாக்கிய தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தக்கண்டராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன்(66). இவரது வீட்டின் அருகே இவரது சித்தப்பா மகன் கோவிந்தன்(54) வீடு உள்ளது. இந்நிலையில் கோவிந்தன் அவரது மாட்டை கடந்த 2ம் தேதி அன்று வீட்டின் முன்பாக கட்டி இருந்தாராம். அப்போது அங்கு சென்ற முனியன் ஏன் இங்கு மாட்டை கட்டுகிறாய் குழந்தைகள் வந்து செல்லும் இடம் இடையூறாக உள்ளதே என கேட்டாராம். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். ஆத்திரமடைந்த கோவிந்தன் கையில் வைத்திருந்த உருட்டு கட்டையால் முனியன் தலை மீது சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முனியன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து முனியன் நேற்று வடவணக்கம்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முனியனை வலை வீசி தேடி வருகின்றார்.