இளநீர் தர மறுத்த விவசாயிக்கு அரிவாள் வெட்டு முதியவர் கைது செய்யாறு அருகே நிலத்தில் பரபரப்பு
செய்யாறு, ஆக. 12: செய்யாறு அருகே இளநீர் தர மறுத்த விவசாயியை அரிவாளால் வெட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நாவல் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன்(62). இவர் அதே கிராமத்தில் திருமால் என்பவருக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். கடந்த 9ம்தேதி மாலை குப்பன் விவசாய நிலத்தில் புல் அறுத்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த பக்கத்து நிலத்துகாரர் சேகர்(65) என்பவர், ‘மது குடிக்க வேண்டும். உனது நிலத்தில் உள்ள மரத்தில் இருந்து இளநீர் பறித்துக்கொடு’ என கேட்டாராம். அதற்கு குப்பன், இளநீர் தர மறுத்துவிட்டாராம். இதில் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சேகர், குப்பன் கையில் இருந்த அரிவாளை பறித்து குப்பனை வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து குப்பன் ெசய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்ெபக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து சேகரை நேற்றுமுன்தினம் கைது செய்தார். விவசாய நிலத்தில் முதியவரை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.