எஸ்ஐஆர் கணக்கெடுப்பு பயிற்சி சப் கலெக்டர் தொடங்கி வைத்தார் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு
செய்யாறு, அக். 10: செய்யாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி மேற்பார்வை அலுவலர்களுக்கு செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எஸ்ஐஆர் கணக்கெடுப்பு குறித்த பயிற்சியும் பிஎல்ஓ பணி நியமன ஆணை மற்றும் பிஎல்ஓ தொகுப்பு பையும் வழங்கப்பட்டது. நேற்று மாலை செய்யாறு மற்றும் வெம்பாக்கம் வட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான தீவிர சிறப்பு முறை திருத்தம் பயிற்சி வகுப்புக்கு செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் செய்யாறு மற்றும் வெம்பாக்கம் வட்டாட்சியர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள், தலைமையிடத்து துணை வட்டாட்சியர்கள், மண்டல துணை வட்டாட்சியர்கள், இரண்டு வட்ட வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement