பிளஸ் 1 மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு போலீசார் விசாரணை வந்தவாசி அருகே காணாமல் போன
வந்தவாசி, செப்.9: வந்தவாசி அருகே காணாமல்போன பிளஸ் 1 மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் விஜயலட்சுமி(15). அரசு பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். கடந்த 28ம் தேதி வீட்டில் இருந்த மாணவி விஜயலட்சுமியை திடீரென காணவில்லையாம். எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது தாயார் தமிழ்ச்செல்வி கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று கீழ்பாக்கம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் மாணவி விஜயலட்சுமி சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த கீழ்கொடுங்காலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து மாணவி இறப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.