3 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு செய்யாறு அருகே அடுத்தடுத்து கைவரிசை
செய்யாறு, அக். 8: செய்யாறு காஞ்சிபுரம் சாலையில் சமத்துவபுரம் அருகே டெங்கு மஸ்த்தூர் சிந்தாமணி(50), என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவின் பூட்டு உடைத்து அதில் இருந்த ஒன்றரை சவரன் நகையும், சுமார் 600 கிராம் 3 ஜதை வெள்ளி கொலுசும் திருடு போனது. அவரது வீடு எதிரே உள்ள லோடு ஆட்டோ டிரைவர் சந்திரன் என்பவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் வளர்புரம் பகுதியில் சிப்காட் தொழிலாளி சுகுமார்(41), என்பவரது வீட்டை உடைத்து பீரோவில் இருந்து ரூ.15,000, சுமார் 400 கிராம் வெள்ளி பொருட்களும் திருடிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த செய்யாறு டிஎஸ்பி கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி, சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தனிப் பிரிவு போலீஸ் முருகன், கிரைம் போலீசார் 3 வீடுகளிலும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர் விஜயகுமார் 3 வீடுகளில் பதிவான கை ரேகைகளை பதிவு செய்தார். இது குறித்து செய்யாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.