இன்ஜினியருக்கு சரமாரி கத்தி வெட்டு போலீசார் விசாரணை
தண்டராம்பட்டு, ஆக.18: தண்டராம்பட்டு அருகே இன்ஜினியரை சரமாரியாக கத்தியால் வெட்டிய முகமூடி ஆசாமி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி இந்திரா நகர் சேர்ந்தவர் விவசாயி துரை. இவரது மகன் யுவராஜ்(23). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். தொடர் விடுமுறை காரணமாக ஊருக்கு வந்திருந்த யுவராஜ் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் மொட்டை மாடியில் படுத்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு முகமூடி அணிந்து கொண்டு வந்த மர்ம நபர் திடீரென யுவராஜை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனால் அவரது வலது தொடை, வயிறு மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.