அண்ணாமலையார் கோயிலில் 3 நாளில் 1.60 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருவண்ணாமலை, ஆக.18: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தொடர் விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த 3 நாட்களில் 1.60 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக கோயில நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக தொடர் விடுமுறை அமைந்ததால், வெளி மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டனர்.