லாரி டிரைவரை மிரட்டி வழிப்பறி: 2 பேர் சிக்கினர்
திருவள்ளூர், செப்.22: திருவள்ளூர் மாவட்டம் காஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (38), லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் லாரியில் மலை மண் லோடு இறக்க பள்ளிப்பட்டில் இருந்து உளுந்தை கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கடம்பத்தூர் அடுத்த கசவநல்லாத்தூர் மின்சார வாரியம் அலுவலகம் அருகில் லாரியை நிறுத்தி வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் பிரசாந்த்(19), கடம்பத்தூரைச் சேர்ந்த ராகேஷ் (19) ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் இங்கிருந்து நீ போக முடியாது என்று கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததோடு பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.570-ஐ பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து லாரி டிரைவர் வேலு கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மோகன் பிரசாந்த் மற்றும் ராகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.