வரும் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருவள்ளூர், செப்.22: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 26ம் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவு துறை, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை,
மின்வாரியம், வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி, நகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் இதர வேளாண் சார்ந்த துறைகளின் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காணவேண்டும் என கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.