காதல் திருமணத்தில் ஆள் கடத்தல் பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் ஜாமீனில் விடுவிப்பு
திருவள்ளூர் ஆக. 11: திருவள்ளூர் அடுத்த களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். இவரது காதல் திருமண விவகாரத்தில் அவரது தம்பி கடத்தப்பட்டார். இதுசம்பந்தமாக காதலி விஜயயின் தந்தை வனராஜ் மற்றும் கணேசன், மணிகண்டன் ஆகியோர் ஜாமீன் கேட்டு திருவள்ளூர் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே மாவட்ட நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு 3 பேரும் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 3 முறையும் ஜாமீன் மனு தள்ளுபடி ஆனது. 4வது முறையாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், திருவள்ளூர் 1வது நீதித்துறை நடுவர் 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் சிறையில் உள்ள விருப்பு ஓய்வு பெற்ற காவலர் மகேஸ்வரி, வழக்கறிஞர் சரத்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை வரும் 14ம் தேதி சென்னை உயர்
நீதிமன்றத்தில் வர உள்ளது. ஏற்கனவே சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சிபாரதம் கட்சி தலைவர் பூவை.ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கியும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.