செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா
Advertisement
திருப்பூர், செப். 16:திருப்பூர் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் அண்ணாவின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மகாஜன சங்கத்தின் மாநிலத் தலைவர் கேபிகே செல்வராஜ் கலந்து கொண்டு அண்ணாவின் உருவசிலைக்கு மாலை அணிவித்தார். இதை தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சமுதாய பொருளாதார தொண்டு மன்றத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், குரு சர்வா சிஏ அகாடமியின் நிறுவனருமான அருணாச்சலம் செய்திருந்தார்.
Advertisement