சேவல் சூதாட்டம் ஒருவர் கைது
Advertisement
ஈரோடு, அக்.13: தாளவாடி அடுத்த மெட்டல்வாடி சிவ்வய்யா தோட்டத்தில் சேவல் சூதாட்டம் நடப்பதாக, தாளவாடி போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 2 சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில், ரங்கசாமி கோயில் தோட்டத்தைச் சேர்ந்த மணி (48), என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், 2 சேவல்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
Advertisement