தேங்காய் பருப்புகள் ஏலம்
Advertisement
காங்கயம், அக். 7: காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. அதில் காங்கயத்தை சேர்ந்த விவசாயி 798 கிலோ எடையுள்ள 16 தேங்காய் பருப்பு மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தார். அதனை காங்கயம் சுற்றுவட்டார பகுதியான காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 3 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். இதில் குறைந்தபட்ச விலையாக ரூ.165.10க்கும், அதிகபட்ச விலையாக ரூ.222.60க்கும் மொத்தமாக ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 226 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.
Advertisement