கொழுமங்குளியில் கிராம அறிவுசார் மையம்
தாராபுரம், அக். 7: தாராபுரம் அருகே கொழுமங்குளி கிராமத்தில் அறிவுசார் மையத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொழுமங்குளி ஊராட்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் கிராம அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது. இதை, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
இதையடுத்து கொழுமங்குளி ஊராட்சியில் உள்ள கிராம அறிவுசார் மையக் கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குண்டடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.சந்திரசேகரன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் திமுக மாவட்டத் தொழிலாளர் நல அணி அமைப்பாளர் மயில்சாமி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மணிவேல், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.