இளைஞரணி சமூக அறக்கட்டளை தி.மு.க. நிர்வாகி சிகிச்சைக்கு உதவி
திருப்பூர், செப். 14: திருப்பூரை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி சேகர் மருத்துவ சிகிச்சைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவர்களின் அறிவுறுத்தலின்படி, சேகருக்கு மருத்துவ சிகிச்சைக்காக தி.மு.க. இளைஞரணி சமூக அறக்கட்டளையின் சார்பில் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை நேற்று வடக்கு மாவட்ட, மாநகர தி.மு.க. அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
Advertisement
இதனை வடக்கு மாவட்ட பொறுப்பாளர், மேயர் தினேஷ்குமார், வடக்கு மாநகர செயலாளர் தங்கராஜ் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சரவணநம்பி, குணராஜ், மகளிர்அணி பிரசார குழு செயலாளர் உமா மகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், வட்ட செயலாளர் சசிகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Advertisement