ஜனசக்தி நகர் பகுதிகளில் ரூ.26.63 லட்சத்தில் தார்சாலை அமைக்க பூமிபூஜை
திருப்பூர், செப். 14: திருப்பூர் மாநகராட்சி 57வது வார்டுக்கு உட்பட்ட ஜனசக்திநகர் விநாயகர் கோவில் வீதி மற்றும் பலவஞ்சிபாளையம் வீதிகளுக்கு சிமென்ட் கான்கீரிட் சாலை அமைத்தல் பணிக்கான பூமிபூஜை ரூ.26.63 லட்சம் மதிப்பீட்டில் பலவஞ்சிபாளையம் ரேஷன்கடை பகுதியில் நடந்தது.இதனை மாநகராட்சி துணைமேயர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் கவிதா நேதாஜிகண்ணன் மற்றும் 57 வது வட்ட கழக நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement