வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
திருப்பூர்,அக்.30: திருப்பூர், மங்கலம் அடுத்த சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் நல்லமுத்து (29). இவர் கூலி தொழிலாளி. குடிப்பழகத்திற்கு அடிமையான நல்லமுத்து அடிக்கடி மதுகுடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
Advertisement
நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Advertisement