கண்டக்டர் மண்டையை உடைத்த வாலிபர் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு
திருப்பூர், செப். 27: திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது.அந்த பஸ்சில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் (45) கண்டக்டராக இருந்தார். அப்போது மது போதையில் வந்த வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறி காங்கயம் செல்வதற்காக டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், கையில் வைத்திருந்த செல்போனால் கண்டக்டர் வேல்முருகனின் தலையில் பயங்கரமாக தாக்கினார்.இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதைப்பார்த்த சக பயணிகள் மற்றும் டிரைவர் அந்த வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்து திருப்பூர் வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், காங்கயத்தை சேர்ந்த விக்னேஷ் (33) என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.