தீயில் கருகி மூதாட்டி பலி
திருப்பூர், செப். 27: திருப்பூர், 15.வேலம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி ரங்கம்மாள் (80). இவர், கடந்த 23ம் தேதி வீட்டிற்கு வெளியே இருந்த விறகு அடுப்பில் தண்ணீர் சுட வைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தீ ரங்கம்மாளின் சேலையில் பற்றி உடல் முழுவதும் பரவியது.
Advertisement
தொடர்ந்து அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரங்கம்மாள் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து 15.வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement