உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 80 மாணவர்கள் ரத்த தானம்
உடுமலை, செப். 26: உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ப.சே.சிவக்குமார், முகாமை தொடங்கி வைத்தார். என்.எஸ்.எஸ். திட்டஅலுவலர் ம.குமரவடிவேல், என்.சி.சி. லெப்டினென்ட் விஜயகுமார், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் கு.சக்திவேல், செயலர் இ.முகமதுஅலி ஜாபர் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் ரத்ததானம் வழங்கிய மாணவர்களை பாராட்டினர்.
Advertisement
ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.ரவி தலைமையில், ஆலோசகர் இளங்கோ, ஆய்வக நுட்புனர் கண்ணன் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் ரத்ததான பணியை மேற்கொண்டனர். மாணவர்கள் 80 பேரிடமிருந்து 80 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தினர் செய்திருந்தனர்.
Advertisement