திருப்பூர் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் உயரப்படுத்தும் பணி
திருப்பூர், நவ.25: திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி சுற்றிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளியை ஒட்டிய காதர் பேட்டை சாலைகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக சுற்றுச்சுவர் உயரம் குறைந்தது. இதனால் மாலை நேரங்களில் சிலர் பள்ளிகளுக்குள் எளிதாக செல்லும் வகையில் இருந்தது.
இதனை தவிர்க்க தற்போது சுற்றுச்சுவரை உயரப்படுத்தும் பணி நடைபெற்றது நடைபெற்று வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே உள்ள சுற்றுச்சுவருக்கு மேலாக சுமார் 4 முதல் 5 அடி வரை சுவர் எழுப்பும் பணி நடைபெறுகிறது. பள்ளி நேரத்தில் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்வது மற்றும் சட்டவிரோதமாக அந்நியர்கள் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையில் சுவர் எழுப்பும் பணி நடைபெற்று வருகிறது.