அவிநாசி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
அவிநாசி, ஆக. 23: அவிநாசி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. முகாமில், அவிநாசி நகராட்சித்தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி, அவிநாசி நகராட்சி ஆணையாளர் வெங்கடேசுவரன் ஆகியோர் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முகாமில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, மற்றும் அவிநாசி நகராட்சி மன்ற கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன், பரூக்கத்துல்லா, கருணாம்பாள், கார்த்திகேயன், சாந்திராஜேந்திரன், சசிகலா, ரமணி, தேவிகுமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் 5 நபர்களுக்கு பெயர் மாற்றம், பிறப்புச்சான்றிதழ், இறப்புச்சான்றிதழ் மற்றும் ஈமச்சடங்கு உதவி ஆகியன நகராட்சி நிர்வாகம் சார்பில் உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், மின்சார வாரியத்தின் முலமாக எட்டு மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டது. இதில், மகளிர் உரிமை உள்ளிட்ட 805 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். மேலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் 805 மனுக்களை பெற்றுக்கொண்டு விரைவில் உரிய தீர்வு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.