சேவல் சூதாட்டம் 12 பேர் கைது
திருப்பூர், நவ. 22: பூமலூர் பகுதியில் சேவல்களை வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பூமலூர் பகுதியில் ரோந்து சென்றனர். பூமலூர்-பசுமை நகர் பகுதியில் 21 சேவல்களை வைத்து சூதாடிய சின்னாண்டிபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (36),
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (26), திருப்பூர் கோடங்கிபாளையம் பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி (36), ஆராக்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (43), 63வேலம்பாளையம் அண்ணாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (30), பொல்லிகாளிபாளையம் பகுதியை சேர்ந்த பிரவீன் (33),
காரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரகு (25). குமார்நகர் பகுதியைச் சேர்ந்த யுவனேஷ் (26), திருப்பூர் வலையங்காடு தெற்கு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (34), வஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (23), திண்டுக்கல்லை சேர்ந்த காசிநாதன் (26), திருப்பூர் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த ஆனந்த் (35), ஆகிய 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 சேவல்கள், ரூ.4,600 மற்றும் 2 கார்கள், 21 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.