வெள்ளகோவிலில் தீ விபத்து விழிப்புணர்வு
வெள்ளகோவில்,ஆக.22: வெள்ளகோவில் தீயணைப்பு துறை, செல்வக்குமார் இண்டேன் கேஸ் சர்விஸ் மற்றும் தனியார் பள்ளி இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சமையல் எரிவாயு, மற்றும் தீ விபத்து பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தியது.
Advertisement
இதில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ தடுப்பு ஒத்திகையும் செய்து காண்பிக்கப்பட்டது. தீயணைப்பு துறை அலுவலர் முத்துசாமி, செல்வக்குமார் இண்டேன் கேஸ் சர்விஸ் மேலாளர் கவிபிரகாஷ் மற்றும் இம்முகாமில் பள்ளியின் தாளாளர் சுதா உள்பட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Advertisement